Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தலைதூக்கும் தேங்காய் கரி தொட்டி ஆலைகள் பள்ளப்பட்டி அருகே மீண்டும் ஆரம்பமா ?

மீண்டும் தலைதூக்கும் தேங்காய் கரி தொட்டி ஆலைகள் பள்ளப்பட்டி அருகே மீண்டும் ஆரம்பமா ?
, புதன், 9 பிப்ரவரி 2022 (23:38 IST)
மீண்டும் தலைதூக்கும் தேங்காய் கரி தொட்டி ஆலைகள் பள்ளப்பட்டி அருகே மீண்டும் ஆரம்பமா ? அதுவும் திமுக வேட்பாளரின் நிலத்திலேயே ஆரம்பிக்க உள்ள சட்டவிரோத தொழிற்சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு – திமுக வேட்பாளரின் சகோதரரே அந்த தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தால் தேர்தல் புறக்கணிப்பு, சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக மக்கள் அறிவிப்பு.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள லிங்கமநாயக்கன்பட்டி கிராமத்திற்குட்பட்ட பூசாரிநாயக்கனூர் பகுதியில் திடீரென்று தேங்காய் கரி தொட்டி தயாரிக்கும் ஆலையினை நிறுவ திமுக பிரமுகரும், பள்ளப்பட்டி நகராட்சியின் திமுக வேட்பாளருமான சண்முகம். பள்ளப்பட்டி நகராட்சியில் 5 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் சண்முகம், இவரது பாத்தியப்பட்ட நிலத்தில் 11 ஏக்கரில் இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் திடீரென்று தேங்காய் தொட்டி சிரட்டை தொழ்ற்சாலை இயங்குவதற்கு திடீரென்று பணிகள் நடைபெற்று வரும் நிலையில்., அதே நிலத்தின் உரிமையாளரும், திமுக வேட்பாளரின் சகோதர் நாச்சிமுத்து என்பவருக்கு அந்த நிலத்திலேயே 3 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், அவரது அனுமதி இல்லாமலும், அவருக்கு பாத்தியப்பட்ட இடத்திலும், அவரது அனுமதி இல்லாமல் அராஜக வேலையினை தற்போது தொடங்கியுள்ள அந்த தொழிற்சாலை வந்தால் அந்த திமுக பிரமுகரும், பள்ளப்பட்டி நகராட்சி திமுக வேட்பாளர் சண்முகத்தின் சகோதரர் நாச்சிமுத்து மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டம் நிறைவேறினாலோ, அல்லது தொடங்கினாலோ, விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் ஆகவே, ஏற்கனவே வானம்பார்த்த பூமி என்ற பெயர் மட்டுமில்லாமல், வறட்சி மிக்க பகுதிகளாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நிலையில்., இந்த பகுதியில் எப்படியோ மானாவாரி பயிர்களும், முருங்கை மற்றும் வறட்சியில் விளையும் விவசாய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வரும் நிலையில், தற்போது அமைய வுள்ள தேங்காய் சிரட்டை தொட்டி தொழிற்சாலை அமைந்தால் அருகில் உள்ள பூசாரிநாயக்கனூர், புதுக்காட்டூர், இந்திராநகர், காட்டூர், மண்மாரி உள்ளிட்ட பகுதிகளில் 150 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இதிலிருந்து வெளிவரும் கரிம வாயுக்கள் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவைகளோடு காற்றில் கலக்கும் புகைகளால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் எழுந்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, விவசாய நீருக்கும், பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் குடிநீருக்கும் ஒரு மிகப்பெரிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தி மக்களுக்கு வியாதிகளை ஏற்படுத்தும், ஆகவே, காங்கயம் பகுதியிலிருந்து திமுக பிரமுகரும், தற்போது நடைபெற உள்ள நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில், பள்ளப்பட்டி நகராட்சியில் 5 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகம் ஒப்புதலோடு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த தொழிற்சாலை அமைய கூடாது என்றும், மீண்டும் அமைந்தால் தேர்தல் புறக்கணிப்பு, சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்த உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இதே பகுதியினை அடுத்துள்ள  குமாரபாளையம், கமலாபுரம் ஆண்டிப்பட்டி கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இதே தொழிற்சாலை பிரச்சினை பூதாகரம் ஆகும் நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த தொழிற்சாலைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது 
 
பேட்டி : 01 நாச்சிமுத்து – அப்பகுதி விவசாயி – திமுக வேட்பாளர் சகோதரர்
 
02 வளர்மதி – அப்பகுதி பெண் விவசாயி – மண்மாரி 
 
03 பாலசுப்பிரமணி – லிங்கமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து 2 வது வார்டு மெம்பர் – கரூர் மாவட்டம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதியை கரூருக்கு அழைத்து சென்று அவமானப்படுத்திய செந்தில்பாலாஜி – செம கடுப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.