இன்னும் சில மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள பிராதான கட்சிகள் தம் கூட்டணி குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களில் தீவிரமாக பிரசாரமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பலகட்ட பேச்சு வார்த்தைகள் ந்டந்து வந்த நிலையில் தற்போது வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் சசிகலா ஆதரவாளரான அமமுகவுடன் கூட்டணி வைக்க காய் நகர்த்தி வருகிறார் சுப்பிரமணிய சாமி.
ஆனால் இவரது நிலைப்பாட்டை எந்த அளவுக்கு பாஜக தலைமை ஏற்கும் என்பது கேள்விக்குறியே. ஆனால் கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி. எதிர்கட்சிகளை சுளையாக தூக்கி சாப்பிட்டு தனியாக நின்று ஜெயித்து எம்.எல்.ஏ வான தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமென சாமி பறந்தாலும்... தமிழிசை மற்றும் மற்ற தலைவர்கள் இதற்கு உடன் பட மாட்டாரகள் என்றே பொதுவாக தெரிகிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கின்றனர் . அரசியல் விமர்சகர்கள்.