Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும்- அன்புமணி டுவீட்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:13 IST)
சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சேலம மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசரியர் பெரியசாமி சமீபத்தில், சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது.

பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒருவரை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தால், அது சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும்.

 ALSO READ: பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தமிழ்நாடு அரசின் விசாரணையை விரைந்து நடத்தி, சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

டெஸ்லா கார் வாங்குங்க.. சிட்டா பறங்க! - எலான் மஸ்க்கின் விளம்பர தூதராக மாறிய ட்ரம்ப்!

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

கவர்னரை கையோடு கூட்டிகிட்டு நிதி கேட்க சென்ற கேரள முதல்வர்.. தமிழக முதல்வர் பின்பற்றுவாரா?

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments