Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசாவில் மதுரை ஜல்லிக்கட்டு?? நித்தி அனுமதி கிடைக்குமா..?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (08:37 IST)
கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
 
பிரபல சாமியார் நித்யானந்தா தனக்கென தனியாக கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறியதிலிருந்து பரபரப்பாக உற்று நோக்கப்பட்டு வருகிறார். அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங்க் ஆகவும் உள்ளார்.  
 
இந்நிலையில் சமீபத்தில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா திறக்கபோவதாக அறிவித்தது கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை (Kailashian Dollars) நித்யானந்தா அறிமுகப்படுத்தினார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது கொரோனாவால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதால் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என கோரியுள்ளனர். 
 
இதற்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளரும் மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவருமான குமார் தனது ஹோட்டலை கைலசாவில் திறக்க அனுமதி கேட்டு நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments