ஜெயலலிதாவை விடாது துரத்தும் கருப்பு: ஆர்.கே.நகர் வெற்றி செல்லுபடியாகுமா?
ஜெயலலிதாவை விடாது துரத்தும் கருப்பு: ஆர்.கே.நகர் வெற்றி செல்லுபடியாகுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது கஷ்ட காலம் போல. கடந்த முறை முதல்வராக இருந்த போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா சிறிது காலம் முதல்வராக இல்லாமல் இருந்தார். அதே போல தற்போதும் ஒரு நிலை வந்துவிடுமோ என அதிமுகவின் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரவீனா தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது எனக்கு வாக்கு சேகரிக்க சமமான வாய்ப்பு தரப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்ய உரிய அனுமதி வழங்கப்படவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டனர். உள்ளிட்ட பல அடுக்கடுக்கான புகார்களை அதில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக கடந்த மே 15-ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தலைமை தேர்தல் அதிகாரி நஜீன் ஜைதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நான் ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் அநியாங்களை பற்றி கூறினேன்.
ஆனால் அவர் இவற்றை பரிசீலிப்பதாக கூறிவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இந்த காரணங்களை வைத்து அந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என பிரவீனா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிரவீணா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கும் பட்சத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.