Publish Date: Sat, 04 Jul 2020 (09:11 IST)
Updated Date: Sat, 04 Jul 2020 (09:12 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் சசிகலா என்ற பெண்ணின் தற்கொலைக்கு பின்னர் திமுக பிரமுகர் ஒருவர் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் சசிகலா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்தார். அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் என் தந்தையை கொலை செய்துவிட்டு நடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சசிகலா குளிக்கும் ப்போது வீடியோ எடுத்து, அதனி வைத்து மிரட்டி சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்கள் என கூறி, மீண்டும் தனது தங்கையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சுடுகாட்டில் காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் திமுகவின் பெயர் அடிப்பட்டுள்ளதால் தலைமை ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.