உயரப்போகிறதா ஆட்டோ கட்டணங்கள்..?

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (14:05 IST)
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
 
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வில்லை என்பதால் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.84 எனவும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆட்டோக்களில் பொருத்தியுள்ள மீட்டர்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய போக்குவரத்து துறை, காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மண்டபத்திற்குள் புகுந்த வெறிநாய்.. குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேருக்குக் கடி!

விர்ஜின் பொண்ணுதான் வேணும்!. விவகாரத்து நபரின் ஆசையை பாருங்க!...

இந்த முறை மிஸ் ஆகாது!.. அமெரிக்காவின் சொத்துக்களை அழிப்போம்!. ஈரான் எச்சரிக்கை!...

2009-க்குப் பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்கத் தடை...இங்கிலாந்தில் சிறப்புமிக்க சட்டம்

20 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? நெகிழ்ச்சியான வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments