Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்மலா சீதாராமனை கண்டிப்பாரா அமித்ஷா..! தமிழிசை விவகாரத்தில் தயாநிதி மாறன் கண்டனம்..!

Dayanithi Maran

Senthil Velan

, வியாழன், 13 ஜூன் 2024 (15:15 IST)
தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித்ஷாவுக்கு தமிழிசை வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 
 
தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பதாகக் கூறப்படும் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர் என்றும் அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா? அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா? என்றும் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் இல்லை.! மீறினால் பேருந்துகள் சிறை.! தமிழக அரசு எச்சரிக்கை..!!