Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்திற்கு தொந்தரவாக இருந்த புருஷன்: கரண்ட் வெச்சே கொல்ல பார்த்த மனைவி!

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (16:09 IST)
கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை வாட்டர் ஹீட்டர் கரண்ட் வைத்து கொல்ல பார்த்து தப்பித்த மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். 
 
ஓசூரை சேர்ந்த தம்பதியினர் சின்னராஜ் - ஜோதி. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் உள்ளான். ஆனால், ஜோதிக்கு வேறு ஒருவருடன் தகாத தொடர்பு இருந்துள்ளது. 
 
நேற்று முன்தினம் சின்னராஜ் வீடு திரும்பிய போது ஜோதி யாருடனோ போனில் பேசியவாரு இருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு முழுவதும் கடுப்பில் இருந்த ஜோதி, விடியற்காலையில் சின்னராஜ் தூங்கிக்கொண்டிருந்தது போது 5 பேரை வரவைத்துள்ளார். 
அந்த 5 பேரில் 4 பேர் சின்னராஜை பிடிக்க ஒருவர் வாட்டர் ஹீட்டர் மூலம் சூடு வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை ஜோதி அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்துள்ளார். வலி தாங்காமல் சின்னராஜ் கூச்சல் போடவே பயந்து போய் ஜோதி மற்றும் 5 பேரும் தப்பி ஓடியுள்ளனர். 
 
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சின்னராஜ் போலீஸில் புகார் அளித்த நிலையில் போலீஸார் ஜோதியையும் அந்த 5 பேரையும் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments