Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலன் அனுப்பிய உல்லாச போட்டோ : பெண் தற்கொலை ! பகீர் சம்பவம்

Advertiesment
கள்ளக்காதலன் அனுப்பிய உல்லாச போட்டோ :  பெண் தற்கொலை ! பகீர் சம்பவம்
, திங்கள், 1 ஜூலை 2019 (19:40 IST)
அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு அருகே உள்ளது நம்மகுளம் என்ற கிராமம். இங்கு சுடர்மணி என்பவர் வசிக்கிறார். இவர் சென்னை கோயம்பேட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியர்க்கு  குழந்தை இல்லை. 
இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சரவணனும் சுடர்மணியும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாகத் தெரிகிறது. இருவரும் நண்பர்கள் என்பதால் சுடர்மணி வீட்டுக்கு சரவணன் அடிக்கடி வந்து சென்றுள்ளார் . அப்போது சங்கீதாவிற்கும்  சரவணனிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், மதுவாங்கிக்கொண்டு சுடர்மணி வீட்டுக்குச் செல்லும் சரவணன், அங்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் ஆழ்த்தி தூங்கவைத்துவிட்டு அவர் மனைவியுடன் சரவணன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது போனில் செல்பியும் எடுத்துவைத்துள்ளார். இந்த விசயம் சுடர்மணிக்கு தெரிந்தது தம்பதியருக்குள் தகராறு ஏற்படவே சங்கிதா பெற்றோர் வீட்டுக்குச் சென்று வசித்துவந்துள்ளார்.
 
இந்நிலையில், சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்தபோது, அவருக்குத் தெரியாமல் தான் செல்பி  எடுத்துவைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் . அப்படி இல்லாவிடில் இதை சமீக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக சரவணன்  சங்கீதாவை மிரட்டியதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் அதில் ஒருபடத்தை சங்கீதாவின் உறவினருக்கு சரவணன் ஒரு புகைப்படம் அனுப்பி உள்ளார். அதைப்பார்த்துவிட்டு அவர் சங்கீதாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதனா வேதனையடைந்த சங்கீதா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் அப்குதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடான் போராட்டம்: ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள் மற்றும் பிற செய்திகள்