கணவர் வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தி கணவரால், மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பல்லாவரம் பகுதியில் வசிப்பவர் ஜெயச்சந்திரன், கப்பல் கம்பெனியில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கொரனோ வைரஸ் ஊரடங்கு காரணமாக இவர் வேலையை இழந்துள்ள நிலையில் இவருடைய மனைவி திவ்யாவை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்
திவ்யா எம்.காம் பட்டதாரி என்பதால் அவருக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்றும் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இப்போதைக்கு சமாளிக்கலாம் என்றும் ஜெயச்சந்திரன் ஆலோசனை கூறியுள்ளார்
ஆனால் திவ்யாவுக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் இதுகுறித்து இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் திடீரென திவ்யா தனது படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ஜெயச்சந்திரன் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த போதும் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உண்மையிலேயே வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்