Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓயாமல் படுக்கைக்கு அழைத்த கணவன் - விரக்தியில் மனைவி தற்கொலை

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (10:45 IST)
கிருஷ்ணகிரியில் கணவன் மனைவியை ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த மாயப்பனுக்கும், அத்திகானூரைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பல கனவுகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கையை துவங்க நினைத்த அபிராமியை மாயப்பனும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சனைக்காக கொடுமை படுத்தியுள்ளனர்.
 
இதனால் அபிராமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அபிராமியின் பெற்றோர் கணவர் வீட்டை அனுசரித்துப் போகும்படி கூறி, மகளை அழைத்துக் கொண்டு மாயப்பனின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசிவிட்டு வந்துள்ளனர்.
 
ஆனாலும் திருந்தாத மாயப்பனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அபிராமியை கொடுமைபடுத்தி வந்துள்ளனர். கணவன் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், தந்தை வீட்டிற்கு செல்ல முடியாமலும் தவித்தார் அபிராமி. ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 
 
இறுதியாக அபிராமி சாவதற்கு முன் ஆடியோ ஒன்றை தனது பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதில் கணவன் தன்னை தொடர்ந்து படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தியதாகவும், மாயப்பன் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அபிராமியின் பெற்றோர் தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை மாயப்பனின் குடும்பத்தினர் தான் கொலை செய்துவிட்டனர் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாயப்பனையும் அவரது குடும்பத்தாரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்