Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் கணவர் விபத்தில் பலி; மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு! – விழுப்புரத்தில் சோகம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (11:21 IST)
விழுப்புரத்தில் காதல் கணவர் விபத்தில் இறந்தது தெரிந்ததும் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரும் சரளா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நண்பர்களோடு ரமேஷ் பைக்கில் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து ஜிப்மர் வந்த சரளா கதறி அழுதுள்ளார். அவரது உறவினர்கள் அவரை ஆறுதல் படுத்த முயன்ற நிலையில் கழிவறைக்குள் சென்ற அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் கணவன் இறந்ததால் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments