Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி? - நீதிமன்றம் சராமாரி கேள்வி

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (16:56 IST)
ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக போராடியவர்கள் மீது, ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது தமிழக அரசு. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ’அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து, தனி நீதிபதி மகாதேவன் முன்பு வழக்கு விசாரணை வந்தது.

அப்போது, 'கடந்த 19-ம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது, மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்' என்று அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மகாதேவன், அமைதியாக போராடியவர்கள் மீது, ஏன் தடியடி நடத்தப்பட்டது. விரும்பத்தகாத வகையில் சம்பவங்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும்.

போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம். எவ்வித வழக்கும் பதிய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments