Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 22 March 2025
webdunia

கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை பிரதமராக ஏன் முன்மொழியவில்லை? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Advertiesment
கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை பிரதமராக ஏன் முன்மொழியவில்லை? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
, ஞாயிறு, 20 ஜனவரி 2019 (06:22 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று நடந்த கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்காதது ஏன்? என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, 'கொல்கத்தாவில் நடைபெற்றது ஒரு வேடிக்கையான கூட்டம் என்றும், எதிர்க்கட்சிகள்  அதிகமாக பேசும் போதே பா.ஜ.கவின்  வளர்ச்சி அதிகரிப்பதாக கூறிய தமிழிசை, 'சென்னை சிலை திறப்பு விழாவில் ராகுல் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த ஸ்டாலின் கொல்கத்தாவில் கூட்டணி மேடையில் அனைத்து தலைவர்கள் முன்னிலையில் அதைசொல்ல பயந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia
மேலும் அடைந்தால் திராவிட நாடு! இல்லையேல் சுடுகாடு! என்று பதவிக்கு வருமுன் வீரவசனம் பேசி, ஆட்சி சுகம் கண்டதும், அதை கைவிட்டது திமுக என்றும், கொல்கத்தாவில் 2ம் சுதந்திர போராட்டம் வரும் என புலம்பிய ஸ்டாலின், மாநிலசுயாட்சி என்பது மாநிலம் மாறினால் நிறம் மாறும் தன்மையுடையவர் ஸ்டாலின் என்றும், விஞ்ஞானபூர்வமான ஊழல் கண்டுபிடிப்பு பட்டயம் வாங்கிய திமுகவாரிசு ஊழல் பற்றி பேசலாமா? என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை செய்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்! ஸ்டலினுக்கு அமைச்சர் மணிகண்டன் சவால்