Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் லண்டன் போகும் காரணத்தை திமுக கூறட்டும்: அதிமுக தடாலடி!

ஸ்டாலின் லண்டன் போகும் காரணத்தை திமுக கூறட்டும்: அதிமுக தடாலடி!

ஸ்டாலின் லண்டன் போகும் காரணத்தை திமுக கூறட்டும்: அதிமுக தடாலடி!
, திங்கள், 3 அக்டோபர் 2016 (15:10 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தான் தற்போது தலைப்பு செய்தியாக உள்ளது. அவரது உடல்நிலை குறித்த வதந்தியும் அவரை பற்றி அறிந்துகொள்ள இருக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.


 
 
இந்நிலையில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக தலைவர் அறிக்கை மூலமாக வலியுறுத்தி இருந்தார். இது தமிழ் ஊடகங்களில் விவாதங்களாக மாறின.
 
பிரபல தமிழ் ஊடகம் ஒன்று தனது வழக்கமான விவாத நிகழ்ச்சியில் முதல்வரின் உடல்நிலையும், அதுகுறித்தான வதந்தி பற்றியும் விவாதித்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் சி.ஆர்.சரஸ்வதியும், திமுக சார்பில் கண்ணதாசன் என்பவரும் கலந்து கொண்டனர்.
 
அதில் பேசிய திமுக உறுப்பினர் கண்ணதாசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மக்களுக்கு கூற வேண்டும், அவருக்கு என்ன பிரச்சனை குறித்து தெளிவுபடுத்த வேண்டும், அவரது புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
 
இதற்கு பதில் அளித்த அதிமுகவை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதற்காக லண்டன் செல்கிறார், அவருக்கு என்ன பிரச்சனை, அவர் அங்கு என்ன சிகிச்சை பெறுகிறார் என்பதை திமுக சொல்கிறதா என பதில் கூறி அதிர்ச்சியளித்தார்.
 
அதுமட்டுமல்லாமல்,  முதல்வரின் உடல் நலம் குறித்து பேட்டியளித்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் செ.கு. தமிழரசனும் ஸ்டாலினின் லண்டன் பயணம் குறித்து கேள்வியெழுப்பினார்.
 
அதில், முதல்வரின் படத்தை வெளியிடவேண்டும் என்று  எதிர்க்கட்சியின் தலைவரே அறிக்கை வெளியிடுகிறாரே, அவர்கள் ஒரு பெண்மணி. அவரின் படத்தை வெளியிடவேண்டும் என்கிறாரே இது என்ன ஒரு அரசியல் நாகரீகம் என்றார்.
 
அதே போல ஸ்டாலின் எங்கு செல்கிறார், எந்த மருத்துவமனைக்குச் செல்கிறார், என்ன சிகிச்சை எடுத்துக்கொள்கிறார், என்று அறிக்கை வெளியிட முடியுமா அவரால். ஒருமுறை தனது ஒரு மகன், இன்னொரு மகன் பற்றி இப்படி சொன்னார் என்று அவரே கூறியிருந்தார் என செ.கு. தமிழரசன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை நம்பி மோசம் போய் விட்டேன் : டி.ராஜேந்தர் கோபம்