Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீது பாயந்த ஸ்டாலின்: தேவையா இது? என நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (20:21 IST)
திமுக தலைவராக இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தனது முதல் பேச்சில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அமித்ஷாவை கருணாநிதி நினைவேந்தல் விழாவுக்கு அழைப்பு விடுத்ததால் திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவிய நிலையில் இந்த வதந்தியை உடைக்க அவர் கடுமையாக பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
ஆனால் சுமார் 30% வாக்குகளை வைத்துள்ள திமுக, வெறும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பாஜக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் திமுக, பாஜகவை ஒரு பொருட்டாக கருதுவது தேவையா? என்ற பேச்சும் எழுகிறது.
 
இன்று வரை திமுகவுக்கு போட்டியாக அதிமுக மட்டுமே இருந்து வரும் நிலையில் பாஜகவை தாக்கி அக்கட்சியை வளர்த்து விட வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் புதிய தலைவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சி திடீரென மனம் மாறி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசன் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க தொடங்கினால் திமுகவுக்கு பாஜகவை தவிர வேறு கூட்டணி வாய்ப்பு இல்லை. எனவே பாஜகவை இப்போதைக்கு கடுமையாக எதிர்க்காமல் இருப்பதே நல்லது என்று பெரும்பாலான திமுகவினர்களின் கருத்தாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments