Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் வாத்துகளால் ஆக்சிஜன் அதிகரிக்கிறது; நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட திரிபுரா முதல்வர்

தண்ணீரில் வாத்துகளால் ஆக்சிஜன் அதிகரிக்கிறது; நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட திரிபுரா முதல்வர்
, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:37 IST)
வாத்துகள் தண்ணீரில் நிச்சல் அடிப்பதால்தான் ஆக்சிஜன் கூடுகிறது என்று திரிபுரா முதல்வர் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

 
பாஜகவை சேர்ந்த பிப்லப் குமார் தேப் சில மாதங்களுக்கு முன் திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இவர் அவ்வப்போது ஏதாவது கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். 
 
மஹாபாரதம் காலத்திலேயே இணையதஅம் இருந்தது என்று அவர் கூறியது முதல் நாடு முழுவதும் அறியப்பட்டார். இவரது இந்த கருத்துக்கு பலரும் கேலியான தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் கூறியதாவது:- 
 
ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது என்று கூறினார்.
 
இதற்காக இவரை பலரும் கேலி செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிப்பு – கரூரில் தி.மு.கவினர் கொண்டாட்டம் (வீடியோ)