டெல்லி, மகாராஷ்டிரா முதல்வர்களை சித்தார்த் விமர்சிக்காதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (13:17 IST)
நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டரில் பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் என உபி முதல்வரை குறிப்பிட்டுக் கூறிய டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்ற உபி முதல்வரின் கருத்துக்கு தான் சித்தார்த் இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உபி முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று குறிப்பிடும் சித்தார்த் உபியை விட டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அந்த மாநில முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்
 
முதல்வரை விமர்சனம் செய்வது சித்தார்த்தின் கருத்து சுதந்திரம் என்றால் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் உபி முதல்வரை மட்டுமே விமர்சனம் செய்கிறவர் என்றால் சித்தார்த் செய்வது பாஜக மீதான வெறுப்பு மட்டுமே என்பது தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு சித்தார்த் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments