கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என்று அனைத்து இடங்களிலும் பெண்கள் தான் தலைவர் ? அப்படி இருக்க உலக பெண்கள் தினத்தில் அக்கறை காட்டாதது ஏன் ?
கரூர் மாவட்டத்தில், மாநகராட்சி ஒன்றும், நகராட்சிகள் 3 ம் உள்ளன. இதில் புகளூர் நகராட்சி மன்ற தலைவர் மட்டுமே ஆண், மற்ற அனைவரும் பெண்கள் தான், இந்நிலையில் 8 பேரூராட்சிகளிலும் பெண்கள் தான் தலைவர், அப்படி இருக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், உலக பெண்கள் தினத்தினை புறக்கணித்துள்ளது போல் உள்ளது. காரணம் கொஞ்சம் விரிவாக பார்ப்போம், முன்பு, கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக மலர்விழி அவருக்கு முன்பு சட்டமன்ற தேர்தலுக்காக காக்கர்லா உஷா, அவருக்கு முன்னர் கலெக்டர் ஜெயந்தி, ஷோபானா, உமா மகேஸ்வரி என்று ஏராளமான பெண் கலெக்டர்கள் இருந்தனர். அவர்கள் இருக்கும் போது பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் அப்போது இருந்த நகரமைப்பு அமைப்புகளின் மூலம் உலக பெண்கள் தினம் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது. ஏன் ? முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஆண்டுதோறும் உலக பெண்கள் தினத்தினை மாவட்டந்தோறும் ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். ஆனால், ஆணுக்கு பெண் சமம் என்கின்ற விதத்தில், நடந்து முடிந்த ஒரு மாநகராட்சி மேயர் பதவியையும் கவிதா கணேசன் பிடித்துள்ளார். இவரை போல், நகராட்சியில் மூன்றில் இரண்டு பெண்களுக்கு தான், அதே போல், 8 பேரூராட்சிகளிலும் உள்ள தலைவர்களும் பெண்கள் தான் இருப்பினும் உலக பெண்கள் தினத்தினை அரசு சார்பிலும் நகரமைப்பு மற்றும் மாநகரமைப்பு சார்பில் கொண்டாடாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மகளிர்களே ஆதங்கப்படுகின்றனர். ஒருவேளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு பெண்ணாகவும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்மணி ஏதேனும் அமைச்சராக இருந்திருந்தால் ஒருவேளை உலக பெண்கள் தினத்தினை கொண்டாடி இருப்பார்களோ, என்று மற்ற பெண்கள் உள்ளக்குமறலை வெளிப்படுத்துகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்ன எனில் நகரமைப்பு தேர்தலில் இடம் பிடித்த அனைத்து தலைவர் பதவி இடத்தினை பிடித்த பெண்களும் திமுக வை சார்ந்தவர்கள் என்பதும், பகுத்தறிவு பகலவன் பெரியார் முறையில் உருவாகிய திமுக ஆட்சியில், திமுக பெண் தலைவர்களுக்கு ஒருவேளை உத்திரவு தரவில்லையா ? என்கின்றனர் நடுநிலையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இவர்களும் பெண்கள் தான் என்று.