சசிகலாவின் தலையில் மோடி கை வைத்தது ஏன் தெரியுமா?: எச்.ராஜா விளக்கம்!
சசிகலாவின் தலையில் மோடி கை வைத்தது ஏன் தெரியுமா?: எச்.ராஜா விளக்கம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய அவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆறுதல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த அதிகாரத்திலும் இல்லாத சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிரதமர் மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுபோல ஆறுதல் சொல்வது வடநாட்டு வழக்கம். தமிழகத்துக்கு வேண்டுமானால் இது புதிதாக தெரியலாம்.
ஆறுதல் சொல்வதற்கு அதிகாரம் முக்கியமல்ல. அவர் யார் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், ஜெயலலிதாவோடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உடனிருந்த சசிகலாவுக்கு பிரதமர் ஆறுதல் சொன்னதில் தவறேதும் இல்லை என எச்.ராஜா கூறியுள்ளார்.