Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மீது முதலமைச்சருக்கு என்ன கோபம்? - எஸ்.பி.வேலுமணி கேள்வி!

Advertiesment
SP Velumani
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (13:53 IST)
அதிமுகவின்  52ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் அண்ணாசிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.


 
அதனை தொடர்ந்து  அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி.வேலுமணி “இந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் தராமல் கோவைக்கு எந்த திட்டமும் தராமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்” என்றார்.

அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடியார் எப்போது மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.

எடப்பாடியார் சொன்னதை நாம் செய்தாலே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி,”அதிமுக இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக வருங்கால முதல்வர் எடப்பாடியாரால் கொடியேற்றப்பட்டு நடைபெற்று வருகிறது எனவும் அதன்படி கோவையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்படட்டது” என்றார்.

”இரண்டரை ஆண்டுகளாக கோவைக்கு திமுக எந்த திட்டமும் வழங்கவில்லை எனவும் தரமற்ற வேலைகளாக கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறிய அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் முழுமையாக முடிப்பத்தில்லை” என குற்றம் சாட்டினார்.

நேற்று பெய்த மழையில் வட்டவழங்கல் அலுவலர் உயிரிழந்தது குறித்து பேசிய அவர் அச்சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனவும் மாதம் ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும் கோவையில் அஜாக்கிரதையாக பணிகள் நடைபெறுகிறது என விமர்சித்தார். அதிமுக வின் ஏக் நாக் சிண்டே என சமூக வலைதளங்களில் கூறுவது குறித்தான கேள்விக்கு, அவர் கட்சிக்கு துரோகம் செய்தவர் எனவும் இந்த பிரச்சினை யார் கிளப்புகிறார்கள்? என்பது உங்களுக்கு(செய்தியாளர்கள்) தெரியும் எனவும் ஏதாவது செய்து குளிர்காய வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள் எனவும் அதிலும் முக்கியமாக திமுக தான் திமுக ஐடி விங் தெளிவாக உள்ளது எனவும் கூறினார்.

webdunia

 
ஆடுகள் வெட்டப்பட்டது என பரவிய செய்திக்கு பதிலளித்த அவர்,  எங்கள் வீட்டு விசேகங்களில் திருமண பத்திரிக்கை தர ஆரம்பித்தாலே நாமெல்லாம் நான்வெஜ் சாப்பிட மாட்டோம் எனவும் நம்முடைய பகுதியில் திருமணம் என்று ஆரம்பித்தாலே வெஜிடேரியன் தான் செய்வோம் என பதிலளித்தார்.

மேலும் நான் இந்த கட்சி ஆரம்பத்ததில் இருந்து என் தந்தை காலத்தில் இருந்து வந்தவன் என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை அடுத்து எடப்பாடியார் எங்களுக்கு தலைவர் என தெரிவித்தார். குழப்பம் செய்ய வேண்டும் என திமுக உட்பட யார் நினைத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை எனவுன் எடப்பாடி தலைமையில் வீறு நடை போட்டு கொண்டிருப்போம் எனவும் நாடாளுமன்ற தேத்தலில் 40ம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடியார் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர் என் மேல் திமுக விற்கும் முதலமைச்சருக்கு என்ன கோபம்? என கேள்வி எழுப்பினார்.

திமுக உட்பட சில தங்களை பாஜகவுடன் இணைவார்கள் என கூறி வருகிறார்கள் ஆனால் எடப்பாடி யார் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்து விட்டார். இருப்பினும் சிலர் அவ்வாறு கூறுகிறார்கள் என தெரிவித்த அவர் உங்களுக்கு என்ன பிரச்சனை? கூட்டணியில் இருந்து வந்து விட்டோம் கூட்டணி கிடையாது என தெளிவாக நாங்கள் கூறி விட்டோம் என்றார்.

மேலும் எங்கள் எம்பிக்கள் காவிரி நீர் பிரச்சனைக்காக போராடினார்கள், எனவும் நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள் எனவும் என்றார். மேலும் இவர்களை (திமுக) போல் நீட் விவகாரத்தில் எடப்பாடியார் நடித்து கொண்டிருக்க மாட்டார் என தெரிவித்தார். எடப்பாடியார் துரோகங்கள் எதிரிகளை முறியடித்து வந்துள்ளார்.

எனவே எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அம்மா(ஜெயலலிதா) ஆட்சியை நாங்கள் தருவோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. திமுக தராத திட்டங்களையும் எடப்பாடியார் தருவார் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம் வழியாக பெங்களூரு - கொச்சி இடையே விமானம்: பயணிகள் மகிழ்ச்சி..!