Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ’வெற்றிகரமான தோல்வி ’ஏன் ? பாஜக ஆலோசனை

தமிழகத்தில் ’வெற்றிகரமான  தோல்வி ’ஏன் ? பாஜக ஆலோசனை
, வியாழன், 6 ஜூன் 2019 (13:54 IST)
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜானநாயகக் கூட்டணி 350 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வென்றது. .பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது.
ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றியடையாததுதான் பாஜக மேலிடத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
இதில்  கட்சியில் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மூத்த தலைவரகளான பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர்.
 
மேலும் இக்கூட்டத்தில் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பயணம் செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசானை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்கு இயந்திரம் வேண்டாம்: கமலா ஹாரிஸின் துணிச்சலான கோரிக்கை