சமீபத்தில் தமிழகத்தின் கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? அதனால் என்ன பயன்? எனத் தெரிந்துக் கொள்வோம்.
ஒரு குறிப்பிட்ட பொருள், அது உணவோ, கலைப்பொருளோ, பயன்பாட்டு பொருட்களோ, எதுவாகயிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு அது உலகளவில் கவனம் பெற்றதாக இருக்கும் நிலையில் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. உலகளவில் அப்படி புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஷாம்பெய்ன் (ப்ரான்ஸ்), டார்ஜிலிங் டீ (டார்ஜிலிங்) உள்ளிட்ட பல பொருட்கள் பிரபலமானவை.
புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கம் மற்றும் பயன்:
இவ்வாறு புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் நோக்கம், அந்த பொருளின் போலிகள் உருவாகாமல் தடுக்கவும், தொடர்ந்து குறிப்பிட்ட அந்த நிலப்பகுதியின் தயாரிப்புத் திறனை உலகளவில் ஊக்கப்படுத்தவுமாகும். உதாரணத்திற்கு திண்டுக்கல் பூட்டு புவிசார் குறியீடு பெற்ற தனித்துவமான ஒரு பொருள். ஆனால் திண்டுக்கல் தாண்டியும் பல பகுதிகளில் பூட்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை திண்டுக்கல் பூட்டு என சொல்லி ஏமாற்றி விற்பதை இது தடுக்கிறது. இதனால் குறிப்பிட்ட அந்தந்த ஊரின் உண்மையான தயாரிப்பு பொருட்கள் உலகளவில் வணிகம் செய்ய வாய்ப்பு கிடைப்பதுடன், போலிகளும் தடுக்கப்படுகின்றன. மேலும் இது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் கலை, பண்பாட்டை அந்த பொருட்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைகிறது.
அவ்வாறாக தமிழ்நாட்டில் இதுவரை 41 பொருட்கள் இந்த புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன. அதில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது.
தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்: