Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுடன் பேசியது என்ன? ராகுல்காந்தி டுவீட்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (19:24 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு இன்று இரு தரப்பினர்களும் கூறி வந்தாலும் வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட ஒரு அஸ்திவாரமாகவே கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியபோது 'காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் என்று பதிவு செய்துள்ளார். 
 
அதேபோல் ராகுல்காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து ராகுல் காந்தியிடம் எதுவும் பேசவில்லை என்றும், காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து பேசியதாகவும், தமிழகத்தின் அரசியல் குறித்து அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments