Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பாஜகவில் சேர இவர்தான் காரணம்: குஷ்பு விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:50 IST)
நான் பாஜகவில் சேர இவர்தான் காரணம்: குஷ்பு விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென நேற்று அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். குஷ்புவின் இந்த திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் குஷ்புவின் காட்சி மாற்றத்திற்கு அவரது கணவர் சுந்தர் சி தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் குற்றம் சாட்டினார். மேலும் குஷ்புவின் விலகலால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஆறுதல் கூறி இருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை விமான நிலையத்திற்கு வந்த குஷ்பு ’தான் பாஜகவில் சேர யார் காரணம் என்பதை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பாஜகவில் சேர தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களே காரணம். எந்த கட்சிக்கும் நாட்டுக்கு நல்லது செய்யும் என்று யோசித்து முடிவெடுங்கள் என்று எல் முருகன் என்னை அழைத்ததால் நான் பாஜகவில் சேர்ந்தேன்’ என்று கூறினார்.
 
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்றும், அக்கட்சியினர் என்னை வெறும் நடிகையாகவே பார்த்ததாகவும் கூறிய குஷ்பு, தான் ஆறு வருடம் காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்து இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சியில்லாத கட்சியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் 
 
திமுகவில் இருந்து வெளியே வந்த பின்னர் நான் எந்த குற்றச்சாட்டும் திமுக மீது வைக்க வில்லை என்றும் என்னை பற்றி குற்றஞ்சாட்டினால் அவர்களுக்கு நான் பதிலடி தருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments