Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Advertiesment
கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Prasanth Karthick

, வெள்ளி, 21 ஜூன் 2024 (17:46 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பெண்கள் உட்பட 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பேசிய அவர், விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனை செல்ல தயங்கியதும், தாமதப்படுத்தியதும்தான் இறப்பு அதிகரிக்க காரணம் என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்