Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் இ-பாஸ் முறை ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்!!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:01 IST)
இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கு எல்லாம் இருக்கிறது என கண்டறிய முடிகிறது என பழனிசாமி விளக்கம்.
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
 
அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் இனி அந்த நடைமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களை இ-பாஸ் முறை இருந்தால் தானே கண்டறிய முடியும். இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கு எல்லாம் இருக்கிறது என கண்டறிய முடிகிறது. இ-பாஸ் முறையால் தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments