சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணித்த ஸ்டாலின் மீண்டும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எந்த குறிப்பும் இல்லாததால் கோபமடைந்த ஸ்டாலின் முதல்வரின் அறிக்கையை ஏற்க மறுத்ததோடு முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடத்தினார்.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் மீண்டும் பங்கேற்க உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.
இதுகுறித்து பேசிய ஸ்டாலின், மக்கள் பலர் திமுக சட்டசபையில் பங்கேற்கவில்லை என்றால் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி விடுவார்கள். மக்களின் குரலை சட்டசபையில் பிரதிபலியுங்கள் என பலர் நேரிலும் தொலைபேசி வாலியாகவும் கோரிக்கை வைத்ததால் புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சட்டமன்றத்திற்குச் செல்கிறோம் என்றார்.
எவ்வளவு குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்து, அ.தி.மு.க. அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை தகர்த்தெறிவோம் என ஸ்டாலின் கூறினார்.