Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்தாவுக்கு உள்ள திராணி தினகரனிடம் ஏன் இல்லை?

மம்தாவுக்கு உள்ள திராணி தினகரனிடம் ஏன் இல்லை?
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (06:57 IST)
மத்திய அரசு தங்களுடன் இணக்கம் காட்டாத மாநில அரசுகளை வருமானவரித்துறை உள்ளிட்ட பல பயமுறுத்தல்களை செய்து வருவது தெரிந்ததே. மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்குவங்கம், டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களுக்கு தொடர்ச்சியாக பல இடைஞ்சல்களை மத்திய அரசு கொடுத்தும் அவர்கள் தைரியமாக அதை எதிர்த்து நின்று குரல் கொடுக்கின்றனர்.



 


மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது தான் பாரதிய ஜனதாவின் அடுத்த இலக்கு என்று அமித்ஷா சமீபத்தில் கூறியபோது, அமித்ஷாவின் சவாலுக்கு தயார் என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாங்கள் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பதில் சவால் விட்டார்.

இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் மத்திய அரசுடன் மல்லுக்கட்டி கொண்டு இருக்கும்போது தமிழகத்தில் போதிய பெரும்பான்மை இருந்தும் மத்திய அரசை எதிர்க்க திராணி இல்லாத தலைவராக தினகரன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோதே தினகரன் அதிர்ச்சி அடைந்தாரே தவிர மத்திய அரசை எதிர்த்து தினகரனோ, முதல்வர் பழனிச்சாமியோ குரல் கொடுக்கவில்லை. இதற்கு மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளும் வருமான வரி கட்ட வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினரின் சர்ச்சை பேச்சு