நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரி கேள்வி..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:59 IST)
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என  தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வாகைகுளம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாளாவது 50% கட்டண வசூல் செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
சுங்க சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது, ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள், அப்பொழுது இடைக்கால தடை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments