Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நான் ஏன் காந்தியைக் கொன்றேன் '' முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:22 IST)
'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்'  என்ற திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ்  மகாராஷ்டிர   மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர் நாதுராம் கோட்சே.

சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30 ஆம் தேதி ஓடிடியில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற கோட்சேவின் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தொடர்பான திரைப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி யான அமோல் கோல்ஹே நடித்திருந்தார். அவருக்கும் இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில்,   ''  நான் ஏன் காந்தியைக் கொன்றேன்  '' என்ற திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ்  மகாராஷ்டிர   மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments