என் குடும்பத்தினர் எனக்கு வாக்களிக்காதது ஏன்? ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:30 IST)
பாஜக வேட்பாளர் கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் கூட ஓட்டு போட வில்லையா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார் 
 
பாஜக சார்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் வார்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது 
 
இவர் நான்காவது வார்டில் தனது குடும்பத்தினருடன் குடி இருப்பதாகவும் ஆனால் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு என்பதால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் தனக்கு ஓட்டுப் போட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
இருப்பினும் அடுத்த தேர்தலில் நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சிக்கு நல்ல பெயரை பெற்றுத் தருவேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments