Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது ஏன்?

பிரதமர் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது ஏன்?
, ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (13:17 IST)
பிரதமர் மோடி நேற்று தமிழகம் வருகை தந்த நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு நிலையில் அண்ணாமலை வரவேற்பு அளிக்க வரவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஏற்கனவே அண்ணாமலை மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது அந்த வதந்திகளை உறுதி செய்வது போல் இருந்தது.
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் பணிகளில் இருக்கிறார் என்றும் குறிப்பாக பாஜக வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்வு செய்வதற்காக பணியை செய்து கொண்டிருப்பதால் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளனர்
 
இருப்பினும் அண்ணாமலையை பங்கேற்காதது குறித்த வதந்திகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா களமாகும் கோவை..! ஒரே வாரத்தில் 3 பேர் பலி!