Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்? செய்தது யார்?: அணி திரளும் கட்சிகள்!

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்? செய்தது யார்?: அணி திரளும் கட்சிகள்!

Advertiesment
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்? செய்தது யார்?: அணி திரளும் கட்சிகள்!
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (09:37 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தினமும் வருகின்றன. இந்நிலையில் அவரது மரணம் குறித்தான நீதி விசாரணைக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.


 
 
ஜெயலலிதா மரணம் இயற்கையாக நடந்ததா? அவரை கொலை செய்தார்களா என பொதுமக்கள் மத்தியில் இன்னமும் விவாதம் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்யப்பட்டார் என்ற பொதுவான கருத்து பலரது மத்தியிலும் காணப்படுகிறது.
 
மேலும் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் தான் அவர் அடக்கம் செய்யப்பட்டார், அவர் முன்னதாகவே இறந்து விட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகிறது.
 
மருத்துவமனை தரப்பில் இருந்து தரும் விளக்கங்கள் சொதப்பலாகவும், ஆதாரமில்லாதவையாகவும் உள்ளன. இந்நிலையில் அவரது மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
 
முன்னதாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசரணை நடத்தப்படும் என கூறி அதற்கான கையெழுத்து இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
 
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் நீதி விசாரணைக்கு தான் எனவும், மேலும் அவரது மரணம் குறித்து விசாரித்தால் பெங்களூர் சிறையில் உள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனைதான் கிடைக்கும் என்றார். பெங்களூர் சிறையில் இருப்பது சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, ஜெயலலிதா மரணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவரை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. மரணம் குறித்து விசாரித்தால் சசிகலாவுக்கு ஆயுள் தண்டனைதான்: ஸ்டாலின் ஆவேசம்!