தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, அவர் தமிழக பாஜக தலைவர் பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து தற்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப 6 பேர் போட்டியிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
புதிய பாஜக தலைவராகும் முனைப்பில் எச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய 6 பேர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் வானதி சீனிவாசன் மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் இருவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கொங்கு மண்டலத்தில் பாஜகவை வலுப்படுத்த இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜக விற்கு ஒரு பெண் தலைவராக இருந்து உள்ளதால் மீண்டும் ஒரு பெண்ணை நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வானதி சீனிவாசன் புதிய பாஜக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன
ஆனால் அதே நேரத்தில் திமுகவின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க எச்.ராஜாவால் மட்டுமே முடியும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கும் கொடுக்கும் வல்லமை உள்ளவர் எச் ராஜா என்றாலும் அவருடைய பேச்சால் பல சமயம் பாஜகவின் இமேஜ் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் எஸ்வி சேகர் தமிழக பாஜக தலைவர் பதவியைப் பிடிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி வானதி ஸ்ரீனிவாசன், எச்.ராஜா, எஸ்வி சேகர் ஆகிய மூவரில் ஒருவருக்கு தலைமை பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன