Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் உண்மை முகம்: தோலுறித்துக்காட்டும் வீடியோ!

சசிகலாவின் உண்மை முகம்: தோலுறித்துக்காட்டும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (15:07 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது இடைத்தை நிரப்ப அவரது தோழி சசிகலா முயன்று வருகிறார். அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.


 
 
ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆவதை பலரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதிமுகவில் கூட சசிகலாவுக்கு முழுமையான ஆதரவு இல்லை. சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு எதிராகவே மக்களும் அதிமுகவினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
 
சசிகலாவுக்கு ஆதரவு கருத்துக்கூறி வருபவர்கள் தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள தான் அப்படி செயல்படுகிறார்கள். அவரிடம் பண பலம் இருப்பதால் தான் அதிமுகவை தனது கட்டுப்பாடில் வைத்திருக்க முயற்சிக்கிறார் என அதிமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

 

நன்றி: விகடன்
 
இந்நிலையில் சசிகலா செய்த முறைகேடுகள், மிரட்டி சொத்துக்கள் சேர்த்தது, பினாமிகள் பெயரில் நிறுவனங்கள் வாங்கியது உள்ளிட்ட பல விவரங்களை Who is the benami queen of tamilnadu என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா எந்த வகைகளில் சொத்து சேர்த்தார். தமிழகம் முழுவதும் அவருக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்புகள், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் சசிகலாவின் பினாமி சொத்துக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது பற்றியும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments