Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எந்த 7 பேர்' ரஜினிகாந்த் உண்மையில் கூறியது என்ன?

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (21:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை குறித்து தங்கள் கருத்து என்ன என்பது குறித்து கேட்டதாகவும், அதற்கு ரஜினிகாந்த் 'எந்த் 7 பேர் என்று கேட்டதாகவும்' ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான். 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை குடியரசு தலைவரிடமே கொண்டு செல்லாமல், மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் 'எந்த 7 பேர் என்று கேட்க, ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்று நிருபர்கள் விளக்கினர்.

அதன் பின்னர்  குடியரசு தலைவரிடமே கொண்டு செல்லாமல், மத்திய அரசு நிராகரித்துவிட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதை குறிக்கும் வகையில் இது குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். ஆனால் இந்த பதிலை 7 பேர் விடுதலை குறித்தே எனக்கு தெரியாது என்று அவர் கூறியது போல் வழக்கம் போல் திரித்து ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றது. ஒருசில ஊடகங்கள் மட்டுமே ரஜினி கூறியதை சரியாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மையில் பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது ரஜினிகாந்த் அவரிடமும், அவரது தாயார் அற்புதம்மாளிடமும் தொலைபேசியில் பேசி விரைவில் நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்று ஆறுதல் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ரஜினி கூறியதை திரித்து கூறிய ஊடகங்கள் தற்போது ரஜினி கூறியுள்ள இந்த விஷயத்தையும் வழக்கம்போல் திரித்து கூறி மலிவான விளம்பரம் தேடிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments