Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் அந்த சார்? ஞானசேகரனுடன் பேசியது யார்? - போலீஸ் வெளியிட்ட விளக்கம்!

Advertiesment
யார் அந்த சார்? ஞானசேகரனுடன் பேசியது யார்? - போலீஸ் வெளியிட்ட விளக்கம்!

Prasanth Karthick

, புதன், 12 மார்ச் 2025 (12:52 IST)

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் போனில் யாருடன் பேசினார் என்பது குறித்து போலீஸ் விளக்கமளித்துள்ளனர்.

 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மாணவியை மிரட்டியதும், அப்போது ஒரு சாருடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவத்தில் ஞானசேகரன் போனில் பேசியதாக குறிப்பிடப்படும் அந்த சார் யார்? என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், விசாரணையில் அதுகுறித்து ஞானசேகரன் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உண்மையாக அப்படி சார் என்று யாரும் இல்லை என்றும், மாணவியை மிரட்டுவதற்காக சும்மா போனை வைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஞான சேகரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் அவர் யாருக்கும் அந்த சமயத்தில் போன் செய்திருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீப் சீக்கை அடுத்து சீனா அறிமுகம் செய்துள்ள புதிய ஏஐ செயலி.. மோனிகா செய்யும் மாயாஜாலம்..!