Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? திணறும் தலைமை!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (11:23 IST)
திமுகவில் உட்கட்சி தேர்தல் துவங்குவதற்குள் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. 
 
திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்த க. அன்பழகன் கடந்த சனிக்கிழமை காலமானதை அடுத்து விரைவில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. 
 
கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளர் ஒருவரை உடனடியாக தேர்தெடுக்க வேண்டும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் மூலமாக நிரப்பப்பட வேண்டும். அதிலும் தற்போது திமுகவில் உட்கட்சி தேர்தல் துவங்கியுள்ளது. இதனால் இதற்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்து எடுக்க உள்ளதாக கூறப்படுக்கிறது. 
 
குறிப்பாக திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன், திமுக மக்களவை எம்பிக்கள் தலைவராக இருக்கும் டிஆர் பாலு, திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கேஎன் நேரு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் எ.வ.வேலு ஆகியோர் திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது. 
 
எனவே குறுகிய காலத்தில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என விளங்காமல் கட்சி தலைமை குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments