நடிகர் தனுஷ் யாருடைய மகன்?: அதிர்ச்சி தகவல்! (வீடியோ இணைப்பு)
நடிகர் தனுஷ் யாருடைய மகன்?: அதிர்ச்சி தகவல்! (வீடியோ இணைப்பு)
Publish Date: Fri, 30 Sep 2016 (15:34 IST)
Updated Date: Fri, 30 Sep 2016 (15:41 IST)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த தம்பதிகள் உரிமை கொண்டாடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினருக்கு 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தனுஷ். இவருடைய உண்மையான பெயர் கலையரசன்.
சிவகங்கை அரசு போக்குவரத்து பனிமனையில் டைம் கீப்பராக பணிபுரிந்து வரும் கதிரேசன் கூறும் போது தங்கள் மகன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது கடந்த 2002-ஆம் ஆண்டு படிக்க பிடிக்கவில்லை என பிரிந்து சென்றுவிட்டான்.
நன்றி: தந்தி டிவி
தனுஷ் என பெயரை மாற்றி நடிகராக மாறிவிட்டதாகவும், இதுவரை தங்களை வந்து பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். சென்னைக்கு சென்ற அவரை பார்க்க முயன்றால் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து காவல் நிலையம் மற்றும் முதலமைச்சாரின் தனி பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.