தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து அந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது. இந்த நிலையில் ஆலையை வாங்குவதற்கு ஜூலை 4-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் விரைவில் இந்த ஆலையை வாங்கும் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அனில் அகரால் கூறியுள்ளார்
ஸ்டெர்லைட் ஆலையை வாங்கும் நிறுவனம் தொடர்ந்து இந்த ஆலையை இயக்குமா? அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்