Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் சமூக விரோதிகளா? ரஜினியை யார் நீ என்று கேட்ட இளைஞர் ஆவேசம்

Webdunia
புதன், 30 மே 2018 (16:15 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானவர்கள் ரஜினியை மகிழ்ச்சியுடன் சந்தித்து அவருக்கு நன்றி கூறினர். ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் ரஜினியை பார்த்து 'யார் நீங்க?  என்று கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அவரிடம் மேற்கொண்டு பேசாமல் ரஜினி சிரித்தபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில் ரஜினியை யார் நீ? என்று கேட்ட அந்த வாலிபர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தன்னுடைய பெயர் சந்தோஷ் என்றும், தான் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்' என்றும் கூறியுள்ளார்.
 
போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு பதிலளித்த சந்தோஷ், 'நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்து சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது' என்று கூறியுள்ளார்.
 
மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய 'காலா' படத்தை ஓடவைக்கவே தூத்துகுடிக்கு வந்துள்ளதாகவும் சந்தோஷ் அந்த பேட்டியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments