சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் காரணமாக விடுவிக்கப்பட்டபோதிலும் சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தை அவர் தரப்பில் இருந்து கட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இதன்படி ஜெயலலிதா பெயரில் உள்ள எந்தெந்த சொத்துக்கள் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்து நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சமுத்து அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு 1991க்கு முன்னர் வாங்கியது என்பதால் இதன் மீது நீதிமன்றம் கைவக்காதாம். ஆனால் அதே நேரத்தில் 1991க்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31 ஏ என்ற எண் கொண்ட கட்டடத்தை பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்கள் 1991-1996 காலகட்டத்தில் வாங்கியது என்பதால் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஐதராபாத் திராட்சை தோட்டம், மற்றும் செகந்திராபாத்தில் உள்ள வீடு ஆகியவை 1991க்கு முன் வாங்கியது என்பதால் அந்த சொத்துக்கள் தப்பித்துவிடும்
மொத்தத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவற்றில் 1991-1996க்குள் வாங்கிய சொத்துக்களை பிரிக்க கர்நாடக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று பிச்சமுத்து கூறியுள்ளார்