Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எங்கெங்கு கனமழை? வானிலை மையம் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:02 IST)
தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் வரும் 3, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தென்கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் கனமழை பெய்யும். 
 
வரும் 4 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

விஜய் கூட்டணிக்கு திருமா வருவாரா? திமுகவின் பிளான் B என்ன?

திருந்தவே மாட்டீங்கள்ல..? இந்தியா அழித்த பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்! பாகிஸ்தான் தந்திர வேலை!

திருமணமான நபருடன் தகாத உறவு.. பெண்ணின் ஆடையை கிழித்து மொட்டையடித்த சம்பவம்.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments