கேரளாவில் அம்மா சங்கம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தி உள்ளார்.
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை வெளியான நிலையில், அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது. தற்போது கேரள திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், பாலியல் குற்றங்கள் உலகம் முழுவதும் நடக்கிறது என்று கூறியுள்ளார். சினிமாவில் எங்களுடன் நடிப்பவர்கள் எல்லோரும் எங்கள் குடும்பம் போன்றவர்கள் என்றும் பெண்களுக்கு ஒரு அவமானம் என்றால் அதற்கு முழு காரணமும் படத்தில் நடிப்பவர்கள் தான் வேண்டுமா தெரிவித்துள்ளார்.
எந்த துறையிலும், ஒரு தப்பு நடக்கும்போது அது உடனே சரி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சினிமாவை முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அம்மா சங்கம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேரளாவில் மோகன்லால் மீண்டும் பணிக்கு வர வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் வலியுறுத்தி உள்ளார்.
சினிமாவை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் எத்தனையோ பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அதற்கெல்லாம் கமிட்டி அமைத்தார்களா என்றும் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.