Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: எங்கே போனது பீட்டா? எச் ராஜா கேள்வி

Advertiesment
கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: எங்கே போனது பீட்டா? எச் ராஜா கேள்வி
, வெள்ளி, 5 ஜூன் 2020 (14:29 IST)
கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியில் கர்ப்பிணி யானைக்கு அண்ணாச்சி பழத்தினுள் வெடிமருந்து வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வரிந்து கட்டிய பீட்டா அமைப்பு யானையின் கொலைக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் 
 
அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்: கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்டெல் நிறுவன பங்குகளை வாங்குகிறதா அமேசான்? பரபரப்பு தகவல்