Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Senthil Velan
திங்கள், 10 ஜூன் 2024 (12:06 IST)
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். எனவே, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் அல்லது ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஒரு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி தருக.! புதிய அரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!!
 
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீது 24-ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments