Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி படத்தை வெளியிட்ட சசிகலாவுக்கு என்ன தண்டனை?: கருணாநிதி கேள்வி

Advertiesment
கபாலி படத்தை வெளியிட்ட சசிகலாவுக்கு என்ன தண்டனை?: கருணாநிதி கேள்வி
, புதன், 27 ஜூலை 2016 (12:37 IST)
ரஜினி நடித்த கபாலி திரைப்படம் வெளியானபோது டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்பொழுது திரையரங்கு உரிமையாளர் ஒருவருக்கு அமைச்சர் ஒருவரின் உதவியாளர் இலவசமாக 10 டிக்கெட் கேட்டு எழுதிய கடிதம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
பின்னர் அமைச்சரின் அந்த உதவியாளர் நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கபாலி படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் முதல்வர் வீட்டில் உள்ள சசிகலாவுக்கு என்ன தண்டனை என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கேள்வி: கபாலி திரைப்படத்திற்கு பத்து டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராமே?
 
பதில்: படத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்!. என அவரது அறிக்கையில் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனில் கடலை போட்ட மனைவி : காலை உடைத்த கணவன்