ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை
ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை
Publish Date: Thu, 18 Aug 2016 (11:56 IST)
Updated Date: Thu, 18 Aug 2016 (12:51 IST)
முதன்முறையாக தந்தை கமலுடன் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் திரைப்படம் சபாஷ் நாயுடு.
விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கமலின் துணைவி கவுதமி இருந்து வருகிறார். அந்த வகையில், சபாஷ் நாயுடு படத்திற்கும் கவுதமி காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில், கவுதமியை தவிர்த்து படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டாக்களை சமூக வலை தளங்களில் கமலின் இரு பெண்களும் வெளியிட்டனர்.
இது கவுதமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்காவில் கவுதமி தரும் ஆடைகளை குறை சொல்லி, வேண்டாம் என்று மறுத்து ரகளை செய்துள்ளார் ஸ்ருதி. இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிப்பதை அறிந்த கமல் ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளார்.
Dinesh
Publish Date: Thu, 18 Aug 2016 (11:56 IST)
Updated Date: Thu, 18 Aug 2016 (12:51 IST)